நடப்பு ஐபிஎல் சீசனின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் சென்னை 15 ஆட்டங்களிலும், டெல்லி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனின் முற்பாதி ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இருந்தது.
இரு அணிகளும் 18 புள்ளிகளை பெற்றுள்ளன. ரன் ரேட் வித்தியாசத்தினால் சென்னை புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும்.
ஆடும் லெவன் விவரம்...
சென்னை சூப்பர் கிங்ஸ்!
ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்
டெல்லி கேபிடல்ஸ்!
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ரிபால் படேல், அக்சர் பட்டேல், சிம்ரான் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments