20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்றது மூலம் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது. தொடக்க வீரர் பதும் நிஸாங்கா 51 ரன்னும் இதன் பின் வந்த சரித் அசலங்கா 68 ரன்னும் எடுத்தனர். கேப்டன் தசுன் ஷனகா 25 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து 190 ரன் என்ற கடின இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன் மட்டுமே எடுத்தது. நிகோலஸ் பூரன் 46 ரன்னும் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 81 ரன்னும் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்த தோல்வியால் 4 புள்ளிகளுடன் இத்தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது. இலங்கை அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்த நிலையில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை ஈட்டியது. இப்பிரிவில் இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. மற்றொரு அணியாக அரையிறுதியில் நுழைய ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதையும் படியுங்கள்: குறையாத ரஜினியின் மாஸ்.. அண்ணன் தங்கை பாசம் - எப்படியிருக்கிறது அண்ணாத்த?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments