Advertisement

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு - டுவைன் பிராவோ அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ, கடந்த 2004ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதே ஆண்டில், தனது முதல் டெஸ்டில் விளையாடினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டி20 போட்டிகளிலும் களமிறங்கினார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள், 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
 
image
இந்நிலையில் 38 வயதான டுவைன் பிராவோ, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆடிவரும் அவர், அபுதாபியில் நாளை நடக்கும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் டுவைன் பிராவோ விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments