Advertisement

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய வீரர்கள் : 210 ரன்கள் குவிப்பு!

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்துள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. 

இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் 140 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் 74 ரன்களிலும், ராகுல் 69 ரங்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.

பின்னர் களம் இறங்கிய பண்ட் மற்றும் பாண்டியா, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பந்தாடினர். இருவரும் 63 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பாண்டியா 13 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார். பண்ட் 27 ரன்களை குவித்தார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற ஆப்கானிஸ்தான் அணி 211 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது.

இந்திய அணி கடைசி 4 ஓவர்களில் 60 ரன்களுக்கு மேல் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா களமிறங்கிய பின் மூன்றாவது விக்கெட்க்கு 21 பந்துகளில் 63 ரன்கள் விளாசினர். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த தருணங்களில் விராட் கோலி முதன் முறையான இன்றைய டி20 போட்டியில்தான் களமிறங்கவில்லை. 

இதையும் படிக்கலாம் : கிரிப்டோ கரன்சி? கணக்கு தொடங்குவது முதல் முதலீடு வரை! நிபுணரின் விளக்கம்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments