நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணியிடம் சூப்பர் 12 சுற்றில் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தங்கள் அணியால் பெரிய அணிகளை வீழ்த்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“இந்தியாவுடன் நாங்கள் விளையாடிய ஆடுகளத்தில் 170 முதல் 180 ரன்களை சேஸ் செய்ய முடியும். ஆனால் இந்திய அணியின் வலுவான பேட்டிங் லைன்-அப், அந்த போட்டியில் 30 ரன்கள் வரை கூடுதலாக எடுத்துவிட்டது. அது எங்களுக்கு ஆட்டத்தில் பின்னடைவை கொடுத்தது.
அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை எங்களது பந்து வீச்சின் மூலம் தகர்க்க வேண்டுமென வியூகம் வகுத்திருந்தோம். ஆனால் அதை செய்ய முடியாமல் போனது. அதை செய்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். அவர்கள் அற்புதமாக பேட் செய்திருந்தனர்.
பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடும் அணிகளையும் எங்களால் வீழ்த்த முடியும். அதற்கு கொஞ்சம் காலம் தேவைப்படலாம். இப்போதைக்கு ஒரு அணியாக நாங்கள் பெரிய அணிகளுடன் உலகக் கோப்பை மாதிரியான தொடர்களில் தான் விளையாடுகிறோம். அது தவிர அதிகளவில் அவர்களுடன் விளையாடினால் அதன் மூலம் அவர்களது பலவீனத்தை நாங்கள் அறிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் எங்கள் வீரர்களுக்கு அவர்களுடன் அதிகம் விளையாடும் போது தான் ‘முடியும்’ என்ற நம்பிக்கை பிறக்கும். அதன் மூலம் நாங்கள் வெற்றியும் பெறுவோம்” என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments