இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நடப்பு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் நேர்காணல் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது அந்த அறைக்குள் திடீரென அவரது மகன் அகஸ்தியா குறுக்கிட்டுள்ளார்.
View this post on Instagram
மகனை பார்த்ததும் அகஸ்தியாவை தூக்கி அணைத்துக் கொள்கிறார் பாண்டியா. ‘அப்பா’ என ஹிந்தி மொழியில் அகஸ்தியா சொல்கிறார். உடனடியாக அவரை பேட்டி எடுத்துக் கொண்டிருந்த நெறியாளர் அகஸ்தியாவின் சில புகைப்படங்களை காட்ட, பாண்டியா அதன் நினைவலைகளை பகிர்கிறார்.
சிறிது நேரத்தில் மகனை மடியில் இருந்து இறக்கி வைத்துவிட்டு பேட்டியை தொடர்கிறார். இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. ஐசிசி இந்த வீடியோவை “நெஞ்சை உருக்கும் காட்சி” என கேப்ஷன் கொடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்து அணியுடன் நடப்பு டி20 உலகக் கோப்பையில் இன்று விளையாடுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments