Advertisement

இவையெல்லாம் நடந்தால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உண்டு!

நடப்பு டி20 உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. தற்போது நான்காவது போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசியது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்க செலுத்த ஸ்காட்லாந்து அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் பும்ரா 2, அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 8 முறை 100 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யப்பட்டுள்ளது.

image

இந்நிலையில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியுமா? அதற்கான வாய்ப்புகள் என்ன? என்பதை பார்ப்போம்.

>இந்திய அணி, ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளை 56+ ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அல்லது 13 ஓவர்களுக்குள் இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற வேண்டும். 

>ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தை 9 ரன்களுக்குள் வெல்ல வேண்டும். 

>நியூசிலாந்து அணி, நமீபியாவை 84 ரன்களுக்குள் வெல்ல வேண்டும். 

>இந்தப் போட்டியில் இந்திய அணி 8.5 ஓவர்களுக்குள் இலக்கை எட்டிவிட்டால் நியூசிலாந்து அணி. 7.1 ஓவரில் எட்டிவிட்டால் ஆப்கானிஸ்தான் அணியின் ரன் ரேட்டை தாண்டிவிடும்.  

>11.2 ஓவரில் வெற்றி பெற்றால் இந்திய அணி +1 ரன் ரேட் பெறும்

image

முன்னதாக, இன்று நடைபெற்ற நமீபியாவுக்கு எதிரானப் போட்டியில் நியூசிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்தி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க பின்னர் விளையாடிய நமீபியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments