Advertisement

இந்திய வீரர்கள் போராட்டம் வீண்; தோல்வியிலிருந்து தப்பித்தது நியூஸிலாந்து: வெளிச்சக் குறைவால் முதல் டெஸ்ட் டிரா

கான்பூரில் நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எந்த முடிவும் எட்டப்படாமல் டிராவில் முடிந்தது. வெளிச்சக் குறைவு காரணமாக கடைசி நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் டிராவில் முடிந்தது.

284 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்திருந்தபோது வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் தோல்வியின் பிடியில் இருந்த நியூஸிலாந்து அணி இயற்கையின் உதவியால், தோல்வியிலிருந்து தப்பித்தது. ஆட்ட நாயகனாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments