நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் டாஸ் வெல்வது பொறுத்து தான் ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பு பெரும்பாலும் அமைகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக டாஸை இழந்து மோசமான சாதனையை டி20 உலகக் கோப்பையில் பதிவு செய்துள்ளது.
2016 மற்றும் 2021 என இரண்டு டி20 உலகக் கோப்பை தொடர்களையும் சேர்த்து தொடர்ச்சியாக ஆறு முறை இந்தியா டாஸை இழந்துள்ளது. நடப்பு தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா டாஸை இழந்துள்ளது.
இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் 2007 மற்றும் 2009 டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக ஐந்து முறை டாஸை இழந்துள்ளன. வங்கதேச அணி கடந்த 2016 டி20 உலகக் கோப்பை தொடரிலும் தொடர்ச்சியாக ஐந்து முறை டாஸை இழந்திருந்தது.
இதையும் படிக்கலாம் : ட்ரெஸ்சிங் ரூமில் என்னதான் நடக்கிறது?.. ரவி சாஸ்திரி-தோனி-கோலி இடையே ஒத்துழைப்பு இல்லையா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments