Advertisement

மீண்டும் 'கம்பேக்' கொடுக்கும் யுவராஜ் சிங்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு

39 வயதான யுவராஜ் சிங் எந்த ரோலில் களத்திற்கு திரும்புகிறார் என்பது தொடர்பான 'சஸ்பென்ஸ்' ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக வலம்வந்த யுவராஜ் சிங், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் வெளிநாட்டு லீக் போட்டிகளில் மட்டும் ஆடிவந்தார். இந்நிலையில் யுவராஜ் சிங், தான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்புவதாக கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
image
யுவராஜ் சிங் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் கடைசியாக அவர் இந்திய ஜெர்சியில் இங்கிலாந்து அணிக்கெதிராக எதிராக 150 ரன்கள் விளாசி சதமடித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதனுடன், "உங்களின் தலைவிதியை கடவுள்தான் தீர்மானிக்கிறார். ரசிகர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நான் மீண்டும் களத்திற்குள் இறங்குவேன் என நம்புகிறேன். இந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி. இந்தியா நமது அணி. கடினமான நேரங்களில் அணியைக் கைவிடாமல் ரசிகர்களாக தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 39 வயதான யுவராஜ் சிங் எந்த ரோலில் களத்திற்கு திரும்புகிறார் என்பது தொடர்பான சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments