இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை செய்கின்றன. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று செஞ்சூரியன் நகரில் ஆரம்பமாகி உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இணையர் 100+ ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். மயங்க், அரை சதம் அடித்து தொடர்ந்து விளையாடியபோது 60 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 50 ரன்களை நெருங்கி வருகிறார்.
இவர்களது பார்ட்னர்ஷிப்பை தகர்க்க தென் ஆப்பிரிக்க அணி முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதை அனைத்தையும் இந்திய வீரர்கள் தவிடு பொடியாக்கி வருகின்றனர். இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments