Advertisement

29 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா! கடைசி நேரத்தில் ஷர்துல் அதிரடி

இந்தியா - தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பான போது இந்தியா 58 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

image

ரகானே, புஜாரா நிதானமாக விளையாடி அடுத்து அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இதனால், இந்திய அணி நிச்சயம் வலுவான ரன்களை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் கனவை தென்னாப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தகர்த்தார். இந்திய அணி வெறும் 29 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. ரஹானே, புஜாரா, பண்ட், அஷ்வின் என நான்கு பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி நடையை காட்டினர். இதில் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 

image

111 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்த புஜாரா மற்றும் ரஹானே இணையரை அவுட் செய்து அசத்தினார் ரபாடா. அவருக்கு அந்த அணியின் மற்று பந்து வீச்சாளர்களும் சிறப்பாக உதவி வருகின்றனர். 

இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் சேர்த்துள்ளது. வந்த வேகத்தில் அதிரடி காட்டிய ஷர்துல் தாக்கூர் 24 பந்துகளில் 28 ரன்களை விளாசி இருந்தார். இதில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். இந்திய அணி 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் வெற்றிபெற எளிதாக இருக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments