Advertisement

31 பந்துகளில் அதிரடி சதம் - இதே நாளில் ஏபி டிவில்லியர்ஸ் செய்த தரமான சம்பவம்1

360 டிகிரி பேட்ஸ்மேன் என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போனவர். அவர் கடந்த 2015-இல் இதே நாளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார். அந்த சாதனை அவர் வசமே இன்று வரை உள்ளது. 

image

அதற்காக அதிக பந்துகள் கூட அவர் எடுத்துக் கொள்ளவில்லை. வெறும் 31 பந்துகளில் சதம் கண்டார் டிவில்லியர்ஸ். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற போட்டியில் அதிவேக சதத்தை அவர் பதிவு செய்திருந்தார். 

அவர் அந்த ஆட்டத்தில் எதிர்கொண்ட முதல் 16 பந்துகளில் அரை சதமும், அடுத்த 15 பந்துகளில் சதமும் கண்டார். 44 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து அந்த இன்னிங்ஸில் அவர் அவுட்டானார். 16 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் விளாசியிருந்தார். அதனால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 439 ரன்களை எடுத்திருந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments