ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே அண்மையில் வெளியான தனது ஆவணப்படத்தின் தொகுப்பில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சலீம் மாலிக் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டை முன்வைத்தார். அது சர்ச்சையான சூழலில் அதை திட்டவட்டமாக மாலிக் மறுத்துள்ளார்.
“எப்போதெல்லாம் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் எழுதிய புத்தகமோ, ஆவணப்படமோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அவர்கள் சில சர்ச்சைகளை எழுப்பி அதன் மூலம் அதற்கு ஆதாயம் (பப்ளிசிட்டி) தேடிக் கொள்வார்கள். அது போன்றதொரு பப்ளிசிட்டிதான் இதுவும். 26 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இப்போது இதை இங்கே சொல்வதற்கு காரணமும் அதுதான். அதனை கடந்த காலங்களில் பலரும் பின்பற்றி உள்ளார்கள். பாவம் அவரால் என்னை அவுட் செய்ய முடியவில்லை என்ற ஆத்திரத்தில் இதனை சொல்லியுள்ளார். அதில் துளி அளவும் உண்மையில்லை” என தெரிவித்துள்ளார் மாலிக்.
வார்னே குறிப்பிட்டு சொன்ன 1994 ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரில் மட்டும் அவர் 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments