ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ், சிமோனா ஹாலப் ஆகிய முன்னணி வீரர், வீராங்கனைகள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், பிரேசிலின் Haddad Maia-வை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி சிடோனா, 6-2, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார்.
ஆடவர் பிரிவில் நடந்த போட்டியின் தொடரின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் உடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில் 7-6, 6-4, 4-6, 6-2 என்ற செட்கணக்கில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
இதையும் படிக்க: சானியா மிர்சா இதுவரை வென்ற பரிசுத் தொகை எத்தனை கோடி தெரியுமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments