ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடரில் அனுபவ வீரர் ஆண்டி முர்ரே 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.
மெல்பர்னில் நடைபெற்று வரும் போட்டியில், முன்னாள் நம்பர் ஒன் வீரரான பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, தரவரிசையில் 120-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் டாரோ டேனியலை எதிர்கொண்டார். இதில் டேனியல் 6க்கு 4, 6க்கு 4, 6க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார்.
இதேபோல, அமெரிக்க ஒபன் பட்டத்தை வென்ற பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராட்காணுவும் தோல்வியை சந்தித்தார். அவர் 2-வது சுற்று போட்டியில், மாட்டினேக்ரோ வீராங்கனை டாங்கா கோவினிக்கிடம் 4க்கு 6, 6க்கு 4, 3க்கு 6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள சானியா மிர்சா, அமெரிக்காவைச் சேர்ந்த ராஜீவ் ராமுடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடுகிறார். இந்த இணை 6க்கு 3, 7க்கு 6 என்ற செட் கணக்கில் செர்பிய இணையை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிக்க: பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகராவுக்கு மஹிந்திரா கார் பரிசு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments