இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்பட பாடலுக்கு தனது பாட்டியுடன் சேர்ந்து நடன அசைவுகளை செய்திருந்தார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னர் ஷேர் செய்யப்பட்ட இந்த வீடியோவுக்கு 49 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்திருந்தனர்.
View this post on Instagram
‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு ஹர்திக் பாண்ட்யா நடனமாடி இருந்தார். அந்த பாடலில் வருவது போலவே டேன்ஸ் ஸ்டெப்களை அவர் போட்டிருந்தார்.
இந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன், “மிகவும் அழகாக உள்ளது. இதற்கு என் அன்பும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனதைக் கவரும் வகையில் இந்த வீடியோ உள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த படம் இந்திய அளவில் ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments