தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. தென் ஆப்ரிக்கா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியுள்ளது.
இப்போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட் வாஷ் செய்ய தென் ஆப்ரிக்காவும் ஆறுதல் வெற்றிக்காக இந்தியாவும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
இதையும் படிக்க: U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 108 பந்துகளில் 162 ரன்கள் குவித்து ராஜ் பவா அசத்தல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments