Advertisement

தேசிய கீதம் இசைக்கும் போது 'சூயிங் கம்' மென்ற விராட் கோலி - வைரலான வீடியோ

நேற்று கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தேசிய கீதம் இசைக்கும்போது சூயிங் கம் மெல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் வைரலாக பரப்பப்படும் இந்த வீடியோ கிளிப்பில், இந்தியாவின் மற்ற அணி வீரர்கள் போல் கோலி தேசிய கீதம் பாடாமல் சூயிங் கம் மெல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

image

நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுடனான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப் டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட் செய்ய களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியின் டிகாக்கின் சதம் அடித்தார். அதேபோல் வேண்டர் டசன், மில்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அந்த அணி 287 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்களும், தீபக் சஹார் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 283 ரன்கள் மட்டுமே எடுத்து வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் தவான் 61 ரன்களும், விராட் கோலி 65 ரன்ளும், சிறப்பாக விளையாடிய தீபக் சஹர் 34 பந்துகளில் 54 ரன்களையும் எடுத்தனர். மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments