Advertisement

“இதுவே எனது கடைசி சீசன்; எனக்கு வயதாகிவிட்டது” - ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா!

இந்திய நாட்டின் முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான அவர் கடந்த 2003 முதல் டென்னிஸ் விளையாடி வருகிறார். இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் அவர். 

image

நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ள சானியா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

“இதுதான் எனது கடைசி சீசன் என நான் முடிவு செய்துவிட்டேன். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இந்த முடிவை அவ்வளவு எளிதாக நான் எடுத்து விடவில்லை. காயத்திலிருந்து நான் மீண்டுவர எனக்கு முன்பைவிட கூடுதல் காலம் தேவைப்படுகிறது. எனது மகன் வளர்ந்துவிட்டான். எனக்கு வயதாகிவிட்டது” என சொல்லி தனது ஓய்வை அறிவித்துள்ளார் சானியா. 

 

இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற அந்தஸ்தை எட்டியவர் சானியா. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments