பார்ல் : வேன்டர் டூசென், புமா ஆகியோரின் சிறப்பான சதத்தால் பார்ல் நகரில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 வி்க்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்்த்தது. 297 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் 96 பந்துகளில் 129 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வேண்டர் டூ சென் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime
0 Comments