Advertisement

“இந்தியாவுக்காக விளையாடுவதில் பெருமை” - முதல்முறையாக தேர்வாகியுள்ள ரவி பிஷ்னோய்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்திருந்தது. ரோகித் தலைமையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இடம் பிடித்துள்ளார். 

image

ராஜஸ்தானை சேர்ந்த 21 வயதான பிஷ்னோய் 2020 அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்திருந்தார். 2020, 2021 என இரண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் இந்த லெக் ஸ்பின்னர். தற்போது லக்னோ அணிக்காக விளையாட உள்ளார். இந்த நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. 

image

“இந்திய அணியின் ஜெர்ஸியில் நான் ஜொலிக்க உள்ளதை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது கனவு நிஜமாகி உள்ளதாக உணர்கிறேன். எனது வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். அதற்காக என்னை தயார் படுத்திக் கொண்டிருந்தேன். என்னை இயல்பாக விளையாட வைத்த அனில் கும்ப்ளே சாருக்கு நன்றி. அவர் என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக வடிவமைத்தார். கே.எல்.ராகுலுடன் லக்னோ அணியில் இணைந்து விளையாடுவதும் சிறப்பான வாய்ப்பு” என சொல்லியுள்ளார் ரவி பிஷ்னோய். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments