மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் துணை கேப்டன் கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ், தீபக் ஹூடா, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், சாஹர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் ஜாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமிக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து விளையாடுவார் என்றும், காயம் காரணமாக ஜடேஜா இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்ஷர் படேல் 20 ஓவர் போட்டிகளில் கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments