மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தேர்வாகியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் கம்பேக் கொடுத்துள்ளார் அவர்.
View this post on Instagram
இந்த நிலையில் தனது புதிய லுக்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவர். வேட்டி மற்றும் சட்டை அணிந்துள்ள அவர் தனது தலையை மொட்டை அடித்துள்ளார். லேசான தாடியுடன் புன்னகைக்கும் அந்த படத்திற்கு “சும்மா அதிருதுல்ல” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் இன்ஸ்டாவில் ஷேரான வெறும் 2 மணி நேரத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் கொடுத்துள்ளனர்.
22 வயதான அவர் 30 டி20, 4 டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments