Advertisement

IND vs SA: பவுமா அரைசதம்; டஸன் அதிரடி ஆட்டம் - சரிவில் இருந்து மீண்டது தென்னாப்பிரிக்கா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி தற்போது போலாண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது. 

image

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 80 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அஷ்வின் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தி உள்ளனர். வெங்கடேஷ் ஐயர் அடித்த த்ரோவில் ரன் அவுட்டாகி வெளியேறினார் மார்க்ரம்.

image

இருப்பினும், நிதானமாக விளையாடி பவுமா அரைசதம் அடிக்க, ராசி வான்டர் டூசன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். இதனால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டுள்ளது. 29 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தி வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments