பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது சீசன் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி, மே 29-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த முறை 10 அணிகள் மோதுவதால் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் இந்த வருடம் லக்னோ அணியில் இடம்பெற்று அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 2018 முதல் அந்த அணியில் மயங்க் அகர்வால் இடம்பெற்று அதிக ரன்களைக் குவித்து வருகிறார். ஐபிஎல் ஏலத்தில் ஷிகர் தவன், ஜான் பேர்ஸ்டோ, ஷாருக் கான், ரபாடா ஆகிய முக்கியமான வீரர்களை பஞ்சாப் அணி தேர்வு செய்துள்ளது.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை: பாகிஸ்தான் வீரரை முந்தினார்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments