Advertisement

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணியில் யார் யார்?

இந்தியா - இலங்கை இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச முடிவு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில், லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி 20 தொடரை முழுமையாக 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இலங்கை அணியை சந்திக்கிறது. அதேவேளையில் இலங்கை அணியானது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த நிலையில் இந்தியத் தொடரை அணுகுகிறது. இந்த சர்வதேசப் போட்டியில் முதன் முதலாக இந்திய அணியைச் சேர்ந்த தீபக் ஹூடா அறிமுகமாகிறார்-

இந்நிலையில், இந்தியா - இலங்கை இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச முடிவு செய்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் விபரம் வருமாறு : ரோகித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்ஷல் பட்டேல், பும்ரா, புவனேஷ் குமார், சாஹல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments