Advertisement

"இடம் கிடைத்தும் வாய்ப்பில்லை" டி20 தொடரிலிருந்து விலகிய ருதுராஜ்: காரணம் என்ன?

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான 2-வது டி20 தொடர் இன்று தர்மசாலாவில் 7 மணிக்கு நடக்க உள்ளநிலையில், இந்தத் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் போட்டியான ஐபிஎல்-லில் சாதனை புரியும் வீரர்கள், இந்திய அணியில் அண்மைக்காலமாக சேர்க்கப்பட்டு, விளையாடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், இலங்கை அணிக்கு எதிரான, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

லக்னோவில் நடந்த முதல் டி20 போட்டியிலேயே விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் போட்டியில் ருதுராஜ் விளையாடவில்லை. தற்போது இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து முழுவதுமாக ருதுராஜ் வெளியேறியுள்ளார். இதையடுத்து ருதுராஜ், காயத்திற்கான சிகிச்சையை மேற்கொள்வதற்காக, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு அனுப்பப்பட உள்ளார்.

image

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளதாவது, வலது மணிக்கட்டு வலி காரணமாக ருதுராஜ் கெய்க்வாட், இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்திய அணியில் விளையாடுவதற்கு பல முறை ருதுராஜூக்கு வாய்ப்பு கிடைத்தும், களத்தில் இறங்கும் வாய்ப்பு என்பது தள்ளிப் போய்க்கொண்டே செல்கிறது.

நியூசிலாந்து 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அவருக்கு பிளேயிங் 11-ல் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தபோதும், ருதுராஜ் களமிறக்கப்படவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறும்போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

image

அந்த அணிக்கு எதிரான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடிய ருதுராஜ், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைத்தபோதும், வலது மணிக்கட்டு காயம் காரணமாக, போட்டியில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments