பஞ்சாப் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த வாசிம் ஜாஃபர், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில், அனைத்து நாடுகளுமே எதிர்நோக்கியிருக்கும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் நாளை (பிப்.12) நடைபெற உள்ளது. முன்னதாக அனைத்து அணிகளும் தங்கள் அணியில் விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளன. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல் ஏலத்துக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததை அடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை விடுவித்தது.
தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கே.எல்.ராகுலை எடுத்துள்ளது. மேலும் அணியின் கேப்டன் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த வாசிம் ஜாஃபர், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வாசிம் ஜாஃபர் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 'தோனியின் கேப்டன்சி அளவுக்கு பினிஷிங் ஷாட் அதிகம் பேசப்படுவதில்லை' - அஸ்வின்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments