மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் தற்போது தொடங்கி உள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் பந்துவீசுவதற்கு தயாராகி வருகிறது. இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் சேர்க்கப்பட்டுள்ளனர். கே.எல்.ராகுல், சஹால் மற்றும் தீபக் ஹூடா இன்றைய ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments