Advertisement

'தோனியின் கேப்டன்சி அளவுக்கு பினிஷிங் ஷாட் அதிகம் பேசப்படுவதில்லை' - அஸ்வின்

'தோனியின் கேப்டன் திறமை குறித்து பேசுபவர்கள், அவரது பினிஷிங் ஷாட்கள் குறித்து  சரியாக பேசுவதில்லை' என்று கூறியுள்ளார் அஸ்வின்.  

15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வருகிற 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடக்கிறது. இந்நிலையில் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திர சிங் தோனி வழிநடத்திச் செல்வது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியிருப்பதாவது:- ''ஐ.பி.எல்.லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி இருந்தார். கடந்த சீசன் உள்பட  சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பட்டங்களை கைப்பற்ற தோனி அணியை வெற்றிகரமாக வழி நடத்தி உள்ளார்.

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சந்தர்ப்பங்களில் முக்கியமான பினிஷிங் ஷாட்கள் விளையாடியதன் மூலம் கடந்த காலங்களில் தோனி அணியின் மன உறுதியை உயர்த்த உதவியுள்ளார். அவரது கேப்டன் திறமை குறித்து பேசுபவர்கள் இது குறித்து  சரியாக பேசுவதில்லை.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸை மிகவும் நிலையான அணியாக மாற்றினார். தோனியின் அமைதியான மற்றும் கூட்டு அணுகுமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: “அவர் பணியை சிறப்பாக செய்பவர்” - இடைக்கால பயிற்சியாளரை புகழ்ந்த ஆரோன் ஃபின்ச்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments