Advertisement

'ஒருமுறை கூட அர்ஜுன் விளையாடியதை நேரில் பார்க்கவில்லை' - சச்சின் டெண்டுல்கர்

இன்னும் ஒருமுறை கூட தன் மகன் அர்ஜுன் விளையாடியதை நேரில் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரை ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இடக்கை வேகப்பந்து வீச்சாளரான 22 வயதான அர்ஜூனின் ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் யுடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும்போது அவர்கள் தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனை தவிர்க்கவே, நான் அர்ஜுன் விளையாடுவதை பார்க்கப் போவதில்லை. ஏனெனில் எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் அர்ஜுன் விளையாட்டைக் காதலிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எனவே, நான் போய் அவன் விளையாடுவதைப் பார்க்க மாட்டேன். அவன் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

image

அதையும் மீறி நான் போய் அர்ஜுனின் ஆட்டத்தைப் பார்க்க நேர்ந்தாலும், எங்கோ ஓரிடத்தில் ஒளிந்துகொண்டே பார்ப்பேன். அர்ஜுனுக்கோ அல்லது அவனின் பயிற்சியாளருக்கு கூட நான் எங்கிருப்பேன் என்பதை தெரியப்படுத்தாமல் பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கோலி கொடுத்த பரிசு: 'இது உன்னிடம் மட்டும்தான் இருக்க வேண்டும்' என திருப்பி கொடுத்த சச்சின்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments