Advertisement

கோலி கொடுத்த பரிசு: 'இது உன்னிடம் மட்டும்தான் இருக்க வேண்டும்' என திருப்பி கொடுத்த சச்சின்

ஓய்வு பெறும் நேரத்தில் விராட் கோலி கொடுத்த பரிசு ஒன்றை திருப்பிக் கொடுத்ததை தற்போது மனம் திறந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

கிரிக்கெட் உலகில் இதுவரை யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் . இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வி அடைந்தாலும் டெண்டுல்கர் ஆட்டத்தை பார்ப்பதற்கே ஒரு தனி ரசிகர் கூட்டம் அந்தக் காலத்தில் இருந்தது. 1989ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சச்சின் டெண்டுல்கர், 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் ஒரு டி20 போட்டி மற்றும் 78 ஐபிஎல் போட்டிகளில் சச்சின் விளையாடியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு, சச்சின் தனது ஓய்வினை அறிவித்திருந்தார். அந்த சமயத்தில், இந்திய அணியின் இளம் வீரராக இருந்த விராட் கோலி, தனக்கு அளித்த பரிசு ஒன்றைக் குறித்து, சச்சின் டெண்டுல்கர் தற்போது மனம் திறந்துள்ளார். இதுகுறித்து சச்சின் கூறுகையில், ''இந்திய அணிக்காக, கடைசியாக ஒரு முறை கிரிக்கெட் போட்டி ஆடிவிட்டு, அதிக மன வேதனையுடன், ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு, என் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்தேன். அப்போது, எனதருகில் வந்த கோலி, பரிசு ஒன்றை எனக்கு வழங்கினார்.

image

விராட் கோலிக்கு அவரது மறைந்த தந்தை கொடுத்த ஒரு புனித கயிறு தான் அது. அதனை, என்னிடம் விராட் கோலி கொடுத்தார். அதை வாங்கிய நான், சிறிது நேரம் என்னிடம் வைத்துக் கொண்டேன். ஆனால், கொஞ்ச நேரத்திற்கு பிறகு, அதனை மீண்டும் நான் கோலியிடமே கொடுத்து விட்டேன்.

அதனைக் கொடுத்து விட்டு அவரிடம், "விலை மதிப்பில்லாத இந்த புனித கயிறு, உன்னிடம் மட்டும் தான் இருக்க வேண்டும். இது உன்னுடைய சொத்து. உன்னுடைய கடைசி மூச்சு வரை, இதனை நீ வைத்திருக்க வேண்டும்" எனக்கூறி விட்டு அதனை மீண்டும், கோலியிடம் கொடுத்து விட்டேன். அது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாகும். என்னுடைய நினைவில் எப்போதும் இருக்கும் ஒரு சம்பவம் ஆகும்'' என சச்சின் டெண்டுல்கர் உருக்கத்துடன்  குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ‘நான் சொல்றேன் ரிவ்யூ எடு’ மைக்கில் பதிவான ரோகித்திடம் கோலி சொன்ன வார்த்தை! முடிவு என்ன?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments