19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி 10 பந்துகளில் 18 ரன் எடுக்கவேண்டியிருந்த நிலையில், கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ரேஹன் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது.
இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. இத்தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ஏற்கனவே 3 முறை தொடர்ச்சியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments