இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட் செய்த போது 8-வது ஓவரை அறிமுக வீரர் ரவி பிஷ்னோய் வீசியிருந்தார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோஸ்டன் சேஸ் எதிர்கொண்டார். அந்த பந்தை கூக்ளியாக வீசியிருந்தார் பிஷ்னோய். லெக்-சைட் திசையில் சென்ற அந்த பந்தை ரோஸ்டன் மிஸ் செய்தார். கீப்பர் பண்ட் பந்தை பிடித்தவுடன் நொடி பொழுதில் ஸ்டம்பிங் செய்திருந்தார். பிறகு அம்பயர் Wide சிக்னல் கொடுத்தார்.
— Maqbool (@im_maqbool) February 16, 2022
இருந்தாலும் பந்து பேட்ஸ்மேனை கடந்து சென்ற போது லேசான சத்தம் இருந்தது. அதை கவனித்த கோலி, கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் ரிவ்யூ எடுக்குமாறு சொல்லியிருந்தார். அதற்காக ரோகித் ஷர்மாவிடம் சிறிது நேரம் பேசியிருந்தார் கோலி. அது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகியுள்ளது. அதாவது ’நான் சொல்கிறேன். ரிவியூ எடுங்க’ என்று விராட் சொல்லியிருந்தார்.
அதன்பிறகே கேப்டன் ரோகித் DRS ரிவ்யூ எடுத்தார். அதற்குள் லெக்-அம்பயரும் ஸ்டம்பிங் குறித்து அறிய மூன்றாவது அம்பயரை நாடியிருந்தார். இருந்தாலும் பேட்ஸ்மேன் ரோஸ்டன் அவுட் இல்லை என்பது உறுதியானது.
ஒருநாள் தொடரின் போதும் கேப்டன் ரோகித் ஷர்மாவை ரிவ்யூ எடுக்குமாறு கோலி சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments