Advertisement

எந்தெந்த அணியில் யார் யார்? காத்திருக்கும் சுவாரஸ்யங்கள்! இன்று ஐபிஎல் மெகா ஏலம்

2022-ம் ஆண்டுக்கான 15-வது ஐ.பி.எல் மெகா ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது.

கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த உள்ளூர் டி20 போட்டியான ஐ.பி.எல். போட்டி. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் ஏற்கனவே உள்ள நிலையில், இந்த ஆண்டு 2 அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. பிசிசிஐ விதிமுறைப்படி, ஏற்கனவே, 8 அணிகளும் 27 வீரர்களை தக்க வைத்துள்ளன. புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா 3 வீரர்களை ஏலத்திற்கு முன்னதாகவே வாங்கியுள்ளது.

image

மீதமுள்ள 217 வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மெகா ஏலம், பெங்களூரு ஐடிசி கார்டெனியா ஓட்டலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இன்று காலை 11 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த மெகா ஏலத்தில், மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 370 இந்திய வீரர்களும், 220 வெளியாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். வீரர்களை எடுப்பதற்காக மொத்தம் ரூ. 561.5 கோடி செலவு செய்யப்பட உள்ளது. 5-வது முறையாக இன்று நடைபெறும் மெகா ஏலத்தில், எந்த அணி, எந்த வீரர்களை தேர்ந்தெடுக்க போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments