Advertisement

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடர்: கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் விலகல்

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடரிலிருந்து கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் விலகினர். மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடாவை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.  

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி தற்போது அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை வென்று முதலில் பேட் செய்த இந்தியா, 50 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது பேட்டிங் செய்துவருகிறது. 

image

இந்த தொடர் முடிந்த கையோடு வரும் 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். 

தசை பிடிப்பு காரணமாக ராகுல் இந்த தொடரில் விளையாடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் அக்சர் படேல் காயத்திலிருந்து முழுவதுமாக மீளாத காரணத்தால் விலகியுள்ளார். இவர்களுக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

image

இந்திய அணி விவரம்!

ரோகித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments