மெக்சிகோ ஒபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
பிரிட்டன் வீரர் கேமரூன் நூரியை எதிர்த்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் விளையாடினார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் முதல் செட்டை 6 க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றின் தொடக்கத்தில் மட்டும் சுதாரித்த நூரி, நடாலுக்கு சற்றே அழுத்தம் கொடுத்தார். இருப்பினும், அனுபவ வீரரான நடால் அந்த செட்டையும் 6 க்கு 4 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.
இதன்மூலம் நேர் செட்களில் கேமரூன் நூரியை வீழ்த்தி நடால் 3 ஆவது முறையாக மெக்சிகோ சாம்பியன் பட்டத்தை வென்றார். ATP டென்னிஸ் தொடர்களில் நடால் வெல்லும் 91 ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments