Advertisement

“தோனியே வழிநடத்தினாலும் வங்கதேச அணியால் சாம்பியனாக முடியாது” - பாக். முன்னாள் வீரர்

வங்கதேச அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்பட்டாலும் அந்த அணியால் சாம்பியனாக முடியாது என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட். இதனை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு ஆதரவாக சொல்லியுள்ளார் அவர். 

image

பாகிஸ்தானில் இப்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போல. இதில் கராச்சி கிங்ஸ் என்ற அணியை வழிநடத்தி வருகிறார் பாபர். இந்த அணி கடந்த 2020 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இருந்தாலும் நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இந்த நிலையில் பாபருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் சல்மான் பட். 

image

“வங்கதேச அணிக்கு கேப்டனாக தோனியோ அல்லது ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டால் கூட அந்த அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது. அது போலதான் இதுவும். பாபர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக உள்ளார். இருந்தாலும் அவருக்கு சரியான அணி இந்த சீசனில் அமையவில்லை. ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. என்னதான் பலமான திட்டமிடல் இருந்தாலும் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் அணியில் இல்லை.

வேகப்பந்து வீச்சு, லெக் ஸ்பின்னர் மற்றும் டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனும் இல்லை. அணியில் இடம் பெற்றுள்ள 11 பேரில் 7 - 8 பேர் ஆல்-ரவுண்டர்கள். அதிலும் இவர்கள் அனைவரும் ஆறாவது டவுனில் பேட் செய்து பழகியவர்கள். இவர்கள் திடீரென 4, 5, 6 மற்றும் 7 இடங்களில் வந்து விளையாடுவது சிக்கலாகி உள்ளது” என தெரிவித்துள்ளார் பட்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments