Advertisement

“திறமையான ஷ்ரேயஸ் ஐயர் ஏன் ஆடும் லெவனில் இல்லை?” - கேப்டன் ரோகித் ஷர்மா விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இளம் பேட்ஸ்மேனான ஷ்ரேயஸ் ஐயர் ஏன் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை என்ற விளக்கத்தை கொடுத்துள்ளார் கேப்டன் ரோகித் ஷர்மா. 

image

அண்மையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான காரணத்தால் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை ஷ்ரேயஸ் மிஸ் செய்தார். இருந்தாலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இந்த நிலையில் அவருக்கு டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 

“ஷ்ரேயஸ் ஐயர் மாதிரியான வீரருக்கு ஆடும் லெவனில் இடம் இல்லாதது கடினம்தான். ஆனால் அணிக்கு எது தேவையோ அதைதான் ஆடும் லெவன் வீரர்களாக சேர்த்துள்ளோம். மிடில் ஆர்டரில் விளையாடக் கூடிய வீரர் பந்து வீசும் ஆப்ஷனுடன் இருப்பது கூடுதல் சிறப்பு என நாங்கள் எண்ணினோம். அதை செய்தோம்.  

அணியில் இடம் பிடிக்க இது மாதிரியான போட்டிகள் வீரர்களுக்குள் இருப்பது ஆரோக்கியமானதாகும். டி20 உலகக் கோப்பைக்கு என்ன தேவையோ அதை செய்து வருகிறோம் என ஷ்ரேயஸ் ஐயரிடம் தெரிவித்துள்ளோம். ஸ்மார்டான, தொழில்முறை கிரிக்கெட் வீரரான அவர் இதனை புரிந்து கொண்டுள்ளார். 

image

ஆடுகளம், எதிரணியினர், கண்டிஷன் மாதிரியானவற்றை கணக்கிட்டுதான் ஆடும் லெவனை அமைக்கிறோம். ஆனால் இதெல்லாம் அணியின் வெற்றிக்காக மட்டும்தான்” என ரோகித் தெரிவித்துள்ளார். 

அண்மையில் ஷ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதோடு அவரை எதிர்வரும் 15-ஐபிஎல் சீசனுக்கான தங்கள் அணியின் கேப்டன் என்றும் கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ருதுராஜ், சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான் மாதிரியான வீரர்களும் இந்த டி20 தொடரில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments