Advertisement

தமிழ்நாட்டின் இரண்டு மாவட்டங்களில் கிரிக்கெட் பயிற்சி அகாடமியை தொடங்கும் சி.எஸ்.கே!

ஐபிஎல் அரங்கில் கெத்தாக வலம் வரும் அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோனி தலைமையிலான இந்த அணி இதுவரையில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் சேலம் பகுதியில் கிரிக்கெட் பயிற்சி அகாடமியை முதற்கட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ‘சூப்பர் கிங்ஸ்’ என இந்த அகாடமியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அடுத்தடுத்த இடங்களில் அகாடமி நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

image

இந்த அகாடமியில் ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர்கள், சென்னை அணியின் வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்கள் இந்த அகாடமியில் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி சார்ந்த விரிவுரை அளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“இது சிறந்ததொரு முயற்சி. வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு இது நிச்சயம் உதவும். அதுவும் சேலத்தில் அமையவுள்ள அகாடமி அந்த பகுதியை ஒட்டி அமைந்துள்ள மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் உதவும். முக்கிய நகரங்களில் மட்டுமே மாடர்ன் டே கிரிக்கெட்டின் எல்லைகள் அடங்கி விடுவதில்லை” என தெரிவித்துள்ள சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி. 

image

“இந்த அகாடமிகள் மூலம் ஒருநாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் களத்தில் விளையாட வருவார்கள். அதை பார்க்கவே அற்புதமாக இருக்கும். இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு. இதனை அற்புதமான முயற்சியாக நான் பார்க்கிறேன்” என தெரிவித்துள்ள சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி. இந்த அகாடமியில் இணைய விரும்புபவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு: www.superkingsacademy.com

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments