இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் (Roston Chase) ஃபீல்ட் செய்தபோது தனது இடது கை உள்ளங்கையில் டேப் சுற்றி வைத்திருந்தார். வழக்கமாக வீரர்கள் ஃபீல்ட் செய்யும் போது விரல்களில் டேப் சுற்றி இருப்பார்கள். ஆனால் சேஸ் உள்ளங்கையில் வழக்கத்திற்கு மாறாக டேப் சுற்றியிருந்தார். அதனை போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கவனித்துள்ளார். மேலும் அதனை அனைவரது பார்வைக்கும் அவர் கொண்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் நடைபெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஆறாவது ஓவர் வீசிய போது சேஸ் கையில் இருக்கும் டேப்பை கவாஸ்கர் கவனித்துள்ளார். “அதென்ன அவரது உள்ளங்கையில்? அவர் கிளவ் அணிந்திருக்கிறாரா? அது விதிகளுக்கு உட்பட்டது தானா? இருந்தாலும் அதை ஏன் அவர் உள்ளங்கையில் அணிந்துள்ளார் என்பது எனக்கு விளங்கவில்லை” என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நாளை நடைபெற உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments