Advertisement

10 மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆசிய சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் விளையாடத் தடை - ஏன்?

ஆசிய சாம்பியன்ஷிப்-க்கான தகுதி போட்டியில் விளையாட 10 மல்யுத்த வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தடைவிதித்துள்ளது.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் மங்கோலியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்குபெறும் மல்யுத்த வீராங்கனைகளை தேர்வு செய்யும் பணி லக்னோவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற நிஷா தாஹியா, ஹனி குமாரி, அங்குஷ், அஞ்சு , ராமன், கீதா, பத்தேரி, பிரியங்கா, நைனா மற்றும் பூஜா ஆகிய 10 மல்யுத்த வீராங்கனைகள், தேர்வு செய்வதற்கான தகுதிப் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

WFI to conduct selection trials for World Championship

பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்கிய தேசிய பயிற்சி முகாமில் அந்த வீராங்கனைகள் கலந்துகொள்ளாததால் ஆசிய சாம்பியன்ஷிப்-க்கான தகுதி போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. “ஒழுக்கமின்மையை எந்த சூழ்நிலையிலும் சகித்துக்கொள்ள முடியாது. சிறந்த மல்யுத்த வீரர்களின் வாய்ப்புகளை நாங்கள் தட்டிப்பறிக்க விரும்பவில்லை. ஆனால் அவர்கள் செய்த விஷயங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments