நியூசிலாந்து நாட்டின் ஹாமில்டன் நகரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 229 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யாஸ்திகா பாட்டியா அரை சதம் விளாசி இருந்தார்.
230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் இழந்து வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி அமைத்த அதிகபட்ச பேட்டிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் வெறும் 40.
முடிவில் 40.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துள்ளது. வரும் 27-ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா பலப்பரீட்சை செய்கிறது. அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அவசியமானதாக உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments