1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிக்கதையை அப்படியே இம்மியளவு கூட மாறாமல் படம் பிடித்து காட்டியுள்ளது ‘83’ திரைப்படம். இந்த படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இயக்குனர் கபீர் கான் இயக்கியிருந்தார். கடந்த டிசம்பர் 24-ஆம் தேதியன்று வெளியான இந்த திரைப்படம் தற்போது ஓ.டி.டி-யில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து இப்போது பேசியுள்ளார் 1983-இல் இந்தியாவுக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்.
“83 படத்தை முதல் முறை பார்க்கும் போது பெரிய தாக்கம் ஏதும் எனக்கு இல்லை. ஆனால் இரண்டாவது முறையாக பார்த்து ரொம்பவே கண்கலங்கி போனேன். மூன்றாவது முறையாக படத்தை நான் பார்க்கப் போவதில்லை.
எங்களது வாழ்க்கை அப்படியே இருந்தபடி எதுவுமே மாறாமல் மிகவும் அழகாக சொல்லப்பட்டுள்ளது” என கபில்தேவ் தெரிவித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments