Advertisement

6 வாரங்கள் ஓய்வு - ரஃபேல் நடால் திடீர் அறிவிப்பு

காயம் காரணமாக 6 வாரங்கள் வரை ஓய்வு எடுக்கப்போவதாக முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

உலகின் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், நடப்பு ஆண்டில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்டு வந்தார். எனினும் அண்மையில் நடந்த இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோல்விகண்டு ஏமாற்றம் அளித்தார். தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்ற நடால் காயத்தால் அவதிப்பட்டார். இடது விலா பகுதியில் உள்ள எலுப்பில் விரிசல் ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து 4 முதல் 6 வாரங்கள் ஓய்வு எடுக்கப்போவதாக நடால் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 25 வயதில் ஓய்வை அறிவித்தது ஏன்? உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை சொல்லும் காரணம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments