ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்து வருகின்றன. மார்ச் 4 - 8 வரை நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.
இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் முறையே 476 மற்றும் 459 ரன்களை குவித்தன. பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 252 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் பதிவு செய்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா 97 ரன்கள், லபுஷேன் 90 ரன்கள், ஸ்மித் 78 ரன்கள் மற்றும் டேவிட் வார்னர் 68 ரன்கள் மற்றும் கிரீன் 48 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தனர்.
இருந்தும் அந்த அணியின் பவுலர்கள் இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். அது கூட முதல் இன்னிங்ஸில் வீழ்த்திய விக்கெட்டுகளாகும். அதோடு முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை ரன்-அவுட் முறையில் வெளியேற்றியிருந்தார் லபுஷேன்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆடுகளம் தார் சாலை போல இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் ட்ரோல் செய்திருந்தன. அதோடு ஆடுகள படத்தை சாலையில் இருக்கும் டிராஃபிக் சிக்னல் செட்டப்பில் மாற்றி கலாய்த்திருந்தது ஆஸ்திரேலிய ஊடகம். இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 12 முதல் 16-ஆம் தேதி வரை கராச்சியில் நடைபெற உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments