''நானும் ஸ்மிருதி மந்தனாவும் விராட் கோலியிடம் சில நிமிடங்கள் மட்டுமே சந்திக்க கேட்டோம், ஆனால் நாங்கள் நான்கு மணி நேரமாக பேசிக் கொண்டிருந்தோம்'' என்று கூறியுள்ளார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்.
நியூசிலாந்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவை, தானும் ஸ்மிருதி மந்தனாவும் சந்தித்துப் பேசியது குறித்து கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறுகையில், ''நியூசிலாந்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருப்பதை அறிந்து அவர்களை சந்திக்க நானும் ஸ்மிருதி மந்தனாவும் அப்பாயின்மென்ட் கேட்டிருந்தோம். 'பேட்டிங்' நுணுக்கங்கள் குறித்த ஆலோசனைகளை கோலியிடம் கேட்டுப்பெற விரும்பினோம். அதற்கான வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் அவரிடம் சில நிமிடங்கள் மட்டுமே கேட்டோம், ஆனால் நாங்கள் நான்கு மணி நேரமாக பேசிக் கொண்டிருந்தோம்.
எதிர்பார்ப்புகளை எப்படி கையாள்வது என்று நான் விராட் கோலியிடம் கேட்டேன். அதற்கு அவர், 'ஒவ்வொரு முறையும் களத்தில் விளையாடும்போது, நான் ஸ்கோர் போர்டைப் பார்த்து, அதில் கவனம் செலுத்துகிறேன். நீங்களும் அதையே செய்யுங்கள், கூட்டத்தின் மீது கவனம் செலுத்தாதீர்கள், அணியின் வெற்றிக்கு நாம் என்ன செய்ய முடியும் என்று திட்டமிடுங்கள்' என்று ஆலோசனை வழங்கினார்' என ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார்.
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் சமீபத்தில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டி20 கிரிக்கெட்டில் டாட் பந்து என்பது பேட்ஸ்மேன் செய்யும் க்ரைம்' - ஸ்ரேயாஸ் ஐயர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments