உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 4 தங்க பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டித் தொடரில் 60 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீரங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டர் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா ஜோடி தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். அதேபோல் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிப்போட்டியில் அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, ஜெர்மன் அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
இந்த உலகக்போப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக இந்திய அணி 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. நார்வே ( 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்), பிரான்ஸ் (3 தங்கம்) நாட்டு அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments