Advertisement

115 ரன்னில் சுருண்ட பஞ்சாப்.. 10.3 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த வார்னர் - #DC அசத்தல் வெற்றி

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து, டெல்லி அணிக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 10.3 ஓவர்களில் டெல்லி அணி வெற்றி வாகை சூடியது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வைகயில், ஒவ்வொரு அணியும் திறம்பட செயல்பட்டு வருகிறது. இதுவரை 31 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளநிலையில், இன்று மும்பை புரோபோர்ன் மைதானத்தில் நடக்கும் 32-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணியில் கடந்த 5 நாட்களில், வீரர்கள் உள்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட், வீரர்கள் மிட்செல் மார்ஷ், டிம் சீஃபர்ட், டிஜிட்டல் ஊழியர் ஆகாஷ் மானே, மசாஜ் தெரபிஸ்ட் சேட்டன் குமார், அணி மருத்துவர் அபிஜித் சல்வி ஆகியோருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அந்த அணி சற்று நிலைகுலைந்துள்ளது.

எனினும், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பு துரதிருஷ்ட வசமாக நடந்துவிட்டது. ஆனால் நாங்கள் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. எங்கள் அணிக்குள் நாங்கள் வலிமையுடன் இருப்போம். கடந்த போட்டிகளில் நாங்கள் நன்றாக பந்துவீதியுள்ளோம், பேட்டிங்கும் செய்துள்ளோம்” என்றார்.

image

இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 9 ரன்களிலும், அகர்வால் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அக்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, ஜிதேஷ் சர்மா மட்டுமே தாக்குப்பிடித்து, அதிகப்பட்சமாக 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமத் , லலித் யாதவ் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களான பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆதிரடியாக விளையாடினர். 3.3 ஓவர்களிலேயே 50 ரன்களை இந்த ஜோடி எட்டியது. பவர் பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் குவித்தனர். 20 பந்துகளில் 41 ரன்கள் விளாசி பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இறுதிவரை அதிரடியை தொடர்ந்து 10.3 ஓவர்களை ஆட்டத்தை முடித்தார் டேவிட் வார்னர். அவர் 30 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணிக்கு இது மூன்றாவது வெற்றி ஆகும். பஞ்சாப் அணிக்கு இது நான்காவது தோல்வி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments